‘மாஸ்டர்’ திரைப்படம் 3,000 தியேட்டர்களில் வெளியாகிறதா..?

‘மாஸ்டர்’ திரைப்படம் 3,000 தியேட்டர்களில் வெளியாகிறதா..?

பொங்கல் நெருங்க, நெருங்க விஜய் ரசிகர்களின் நாடித் துடிப்பும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

‘மாஸ்டர்’ வருமா..? வந்திருமா..? சேதாரமில்லாமல் வந்திருமா…? என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

ஆனால், விஜய்யின் இந்த ‘மாஸ்டரை’ மிகப் பிரம்மாண்டமான அளவுக்கு கொண்டு போயிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார்.

இந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்பை ‘B4U’ என்னும் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறார் லலித்குமார். அந்த நிறுவனமோ எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதுமாக 2000 திரையரங்குகளில் திரையிட இருக்கிறது.

இதனால் ஒட்டு மொத்தமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்திய அளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று ஒரு தமிழ்த் திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்திற்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும்போது போடப்படும் வசூல் பிரிப்பு சதவிகிதத்தை மிக அதிக அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.

பொதுவாக பெரிய பட்ஜெட் படம் என்றால் விநியோகஸ்தர்களுக்கு 65 சதவிகிதம், தியேட்டர்காரர்களுக்கு 35 சதவிகிதம் என்று வரும். இல்லையென்றால் 69 சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கு, 40 சதவிகிதம் தியேட்டர்காரர்களுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

ஆனால், இந்த ‘மாஸ்டர்’ படத்திற்கு விநியோகஸ்தர்கள் தங்களுக்கு 80 சதவிகிதம் என்றும் தியேட்டர்காரர்களுக்கு 20 சதவிகிதம் என்றும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது தமிழ்ச் சினிமாவில் முதல்முறையாக நடக்கும் சம்பவம் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகப் புள்ளிகள்.

Our Score