தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ உருவாகிறது

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ உருவாகிறது

2010-ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வரலாற்றுக் கதையில் ஒரு திரைப்படம் உருவானது என்றால் அது இந்தப் படம்தான்.

படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தமைக்காக பார்த்திபனுக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்திருந்தது.

கி.பி. 1279-ம் வருடத்திய சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் ஆட்சிக் காலம் பற்றி இத்திரைப்படம் பேசியது.

2007-ம் வருடம் துவக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்துதான் இத்திரைப்படம் வெளியானது. இருந்தாலும் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் கலவையான விமர்சனங்கள் எழுந்தன என்பதும் உண்மைதான்.

இப்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்குகிறார் இயக்குநர் செல்வராகவன்.

இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். தனுஷ் தனது அண்ணனான செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கும் 5-வது திரைப்படம் இதுவாகும்.

“இப்போதே ப்ரீ புரொடெக்சன்ஸ் வேலைகள் துவங்க இருக்கின்றன. ஆனால் படம் 2024-ம் வருடம்தான் திரைக்கு வரும்…” என்று நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் செய்தியில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், இசையமைப்பளாராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றவுள்ளனர். 

Our Score