full screen background image

மாஸ்டர் மகேந்திரன்-ஜீவிதா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

மாஸ்டர் மகேந்திரன்-ஜீவிதா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். 

தயாரிப்பாளர்களான முத்து, சந்தோஷ் சிவன் & ரவி மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

‘மாஸ்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் சார்லி, ‘கும்கி’ அஸ்வின், ‘கலக்கப் போவது யாரு’ புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர். இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான ‘தூக்குதுரை’ படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத் தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.

இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இந்தப் படத்தை எழுதி, இயக்குகிறார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், இயக்குநர்கள் சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் இந்த முதல் தயாரிப்பை இன்று தொடங்கி வைத்துள்ளனர்.

பிரம்மாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

சர்வைவல் த்ரில்லராக உருவாகும் இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score