சமூக வலைத்தள சினிமா விமர்சர்களிடையே சண்டையை மூட்டப் பார்க்கும் ‘மசாலா படம்’..!

சமூக வலைத்தள சினிமா விமர்சர்களிடையே சண்டையை மூட்டப் பார்க்கும் ‘மசாலா படம்’..!

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘Terminator’, ‘Mission Impossible’, ஆகிய படங்களை வெளியிட்ட Auraa சினிமாஸ் இந்த மாதம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தை வெளியிட உள்ளனர்.

இதைத் தொடர்ந்து  All in pictures என்னும் புதிய பட நிறுவனம் தயாரித்திருக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கத்தில், பாபி சிம்ஹா,   மிர்ச்சி சிவா நடிக்கும் ‘மசாலா படம்’ என்னும் திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ளனர். 

‘இன்று திரைக்கு வரும் படங்கள் அனைத்துமே ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் தரமாகத்தான் இருக்கின்றன. என்னதான்  உணவு  பிரமாதமாக சமைக்கப்பட்டாலும் பரிமாறப்படும்போதுதான் அந்த உணவுக்கான மரியாதையே கூடுகிறது.  எங்களது நிறுவனம், நல்ல தரமான படைப்புகளை தேர்ந்தெடுத்து, அதை உரிய வகையில் மக்களிடம்  சென்று  சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.  

இப்பொழுது எங்களது நிறுவனத்தின் சார்பில் அடுத்து வெளியிடப்பட  உள்ள படம் ‘மசாலா படம்’. இது பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகும். சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சிப்பவர்களுக்கும், அப்படி செய்யக் கூடாது என சொல்லும் திரை உலகினருக்கும் இடையே  நடக்கும் வாதத்தையும், பிரதிவாதத்தையும்  படம் பிடித்துக் காட்டும் கதைதான்  இந்த ‘மசாலா படம்’.

இயக்குநர் லக்ஷ்மன் மிகவும் சுவராசியமாக இந்தக் கதையை கையாண்டு இருக்கிறார். இந்தக் கதை நிச்சயமாக   யாரும் சொல்லாத கதைதான்,  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்கூட யாருக்கும் இப்படி ஒரு கதை தோன்றி இருக்காது. அந்த வகையில் இவ்வளவு வித்தியாசமான கதையை தேர்ந்து எடுத்து தயாரித்த  தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் இசையை வெளியிடும் பழம்பெரும் நிறுவனமான லஹரி நிறுவனத்தாருடன் இணைந்து பணி புரிவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நாளை ‘கேளு மச்சி கேளு , சினிமா பொறந்த  கதை கேளு ‘ என்ற துள்ளலான பாட்டை வெளியிடுகிறோம். இந்தப் பாடல் ‘மசாலா படம்’ பரிமாறப்பட ரெடி என அறிவிக்கும்..” என்று  கூறினார் auraa cinema நிறுவனர் மகேஷ்.   

Our Score