full screen background image

கார்த்திக், வைபவ், சுஷ்மா ராஜ் நடிக்கும் ‘ஜிந்தா’ திரைப்படம்

கார்த்திக், வைபவ், சுஷ்மா ராஜ் நடிக்கும் ‘ஜிந்தா’ திரைப்படம்

தமிழ்ச் சினிமா ரசிகர்கள் யாரை கேட்டாலும் நான் நடிகர் கார்த்திக்கின் ரசிகர் என்றும் அவரது துடிப்பான நடிப்பு தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுக் கூறுவார்கள். அவரை அறித்தவர்கள் திரை உலகில் அவருக்கு எப்போது வந்தாலும் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை கணித்து கொண்டே இருந்தனர்.

‘அநேகன்’ படத்தில் கார்த்திக் பெரும் பெயர் பெற்றதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது இன்னிங்ஸ் கோலாகலமாக துவங்கியது. இப்போது, ‘ஜிந்தா’  என்ற தலைப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் மூலம் தனது பயணத்தைத் தொடர்கிறார்.

எஸ்.ஏ. எப். சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஏ. ராஜா தயாரிக்க, இயக்குனர் வசந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்குனராக அறிமுகமாக, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘கப்பல்’ படம் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி இளம் இயக்குநர்களின்  முதல் தர தேர்வாக இருக்கும் வைபவ் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக நடிப்பவர் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம்  அறிமுகமான  நடிகை சுஷ்மா ராஜ்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் வெற்றி செல்வன், “இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி ஆகும். இந்தக் கதைக்கு உற்சாகமும், துள்ளலும்தான் மூலதனம். இந்தக் கதையை நான் எழுதும்போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக் சாரும், வைபவும்தான். அவ்வளவு பொருத்தமாக  இருந்தது.

தயாரிப்பாளர் ராஜா சார் என்னுடைய நெருங்கிய நண்பராவார். என்னுடைய கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றுபவர் போஜன் கே  தினேஷ். படத்தொகுப்பு கே எம் ரியாஸ் முஹம்மது . ‘ஜிந்தா’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்…” என்று  கூறினார்.

Our Score