A. ஜமால் சாகிப் அவர்கள் பெருமையுடன் வழங்கும்… மயில் தேவர் ஃபிலிம்ஸ் சார்பில் டாக்டர் K..C.பிரபாத் M.A., அவர்கள் பிரம்மாண்டமாக தயாரிக்கும் முதல் படம் ‘மருதாண்டசீமை’.
மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க… பல்லவி அவருடன் ஜோடி சேர்கிறார்… இன்னொரு நாயகனாக ‘தைரியம்’ படத்தின் ஹீரோவான குமரன் நடிக்க… இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி அமுதவாணன், ‘தார தப்பட்டை’ படத்திற்கு பிறகு காமெடி நாயகனாக கை கோர்க்கிறார்.
மேலும் சுப்பு பஞ்சு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நிரோஷா, ‘பாயும் புலி’ சாமிநாதன், சம்பத் ராம், ‘சூது கவ்வும்’ ராதா.. இவர்களுடன் பாடகர் வேல்முருகன், ‘கும்புடுறேன் சாமி’ ராமராஜ், மொக்க ராசு, சிசர் மனோகர், ஹலோ கந்தசாமி போன்ற பிரபலங்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான நவீன் ஷங்கர் இசையமைத்திருக்கிறார். அறிமுகம் என்றாலும் ஆண்ட்ரியா, வேல்முருகன், ஆண்டனி தாசன், இசையமைப்பாளர் தேவா, ஹரிசரண் போன்ற பிரபலங்களை பாட வைத்துள்ளார்.
மேலும் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு நிச்சயாக இவர் போட்டியாக வருவார் என்று இந்தப் படத்தின் பாடல்களை கேட்டவர்கள் புகழாரம் சூட்டுவது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்களை ஞானகரவேல், மணியமுதவன், செந்தமிழ் தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா D.F.Tech., இவர் ‘எம்டன் மகன்’, ‘திமிரு-2’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு – ராம் சுதர்ஷன், கலை – A.R.மோகன், தயாரிப்பு வடிவம் – M.ஜெயக்குமார். பிருந்தா, அசோக்ராஜ், பாபி ஆண்டனி ஆகியோர் நடனம் அமைத்துள்ளார்கள். ஸ்டில்ஸ் – VR. மணிகண்டன்.
இந்தப் படத்தை ‘வெண்நிலா வீடு’ படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருப்பதால் படத்தின் கதையை அறிய ஆவலுடன் கேட்டால், “அடித்துக் கேட்டாலும் கதை பற்றி மூச்சு விடமாட்டேன்..” என்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.
“இந்த ‘மருதாண்ட சீமை’ திரைப்படம் ஒரு வரலாற்று பின்னணியுடன் அல்ட்ரா மாடர்ன் வில்லேஜ் படமாக இந்தப் படம் வளர்ந்து வருகிறது. இது நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.
இந்தப் படத்தின் இரண்டு பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறோம்.. விரைவில் படம் வெளியாகவுள்ளது..” என்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.