full screen background image

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் ‘மரிஜூவானா’ திரைப்படம் துவங்கியது..!

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் ‘மரிஜூவானா’ திரைப்படம் துவங்கியது..!

Third Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.D.விஜய் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மரிஜூவானா’.

இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆஷா பார்த்தல் என்ற புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், மன்னை சாதிக், பிஜிலி ரமேஷ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

எழுத்து, இயக்கம் – எம்.டி.ஆனந்த், ஒளிப்பதிவு – பாலா ரோசையா, இசை – கார்த்திக் குரு, பாடல்கள் – காதல் வேந்தன், படத் தொகுப்பு – எம்.டி.விஜய், கலை இயக்கம் – டி.சரவணன், நடன இயக்கம் – பிரவீன் குமார், டிஸைன்ஸ் – பாலசுப்ரமணியம், சண்டை இயக்கம் – சரண், புகைப்படங்கள் – ஜூட், உடை வடிவமைப்பு – கெஸியா, தயாரிப்பு நிர்வாகம் – ஜி.ஏழுமலை, மக்கள் தொடர்பு – பிரியா.

IMG_8358

இந்த ‘மரிஜுவானா’ படத்தின் துவக்க விழா, இன்று காலை சென்னை, மதுரவாயலில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது.

இந்தத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் P.L.தேனப்பன், சரவணன், இயக்குநர்கள் R.V.உதயகுமார் மற்றும் ராஜு முருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இயக்குநர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

நடிகர் யோகி பாபுவும் படக் குழுவினரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Our Score