full screen background image

இன்றைய ரிலீஸ் படங்கள் – மார்ச்-28, 2014

இன்றைய ரிலீஸ் படங்கள் – மார்ச்-28, 2014

2014 மார்ச் 28 வெள்ளிக்கிழமையான இன்றைக்கு 4 நேரடி தமிழ்ப் படங்களும், 2 தெலுங்கு டப்பிங் படங்களும், 2 ஆங்கில டப்பிங் படங்களும்  ரிலீஸாகியிருக்கின்றன.

1. நெடுஞ்சாலை

6T3B0066_2

தயாரித்து முடிந்த நிலையில் 1 வருட காலம் காத்திருந்த இந்தப் படத்தை ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் இதனை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

 ஃபைன் ஃபோகஸ் நிறுவனம் ஸதயாரிக்க ஆரி, ஷிவதா, தம்பி ராமையா, சலீம் குமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சத்யா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியான படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

2. இனம்

Inam 6 copy

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஈழப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  இதில் சுகந்தா, கரண், சரிதா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். விஷால் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார்.

படம் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என்று ஒரு குழுவினரும், இல்லை இல்லை.. நன்றாகத்தான் எடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு குழுவும் குரல் எழுப்பி வருகின்றன. இன்றைக்கு இந்தப் படம் ரிலீஸான தியேட்டர்களில் எல்லாம் போராட்டங்கள் வெடித்துள்ளதாகத் தகவல்.

3. மறுமுனை

Marumunai (31)

எம்.பி.எல். பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை மாரீஷ் குமார் இயக்கியிருக்கிறார். மாருதி, மிருதுளா பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், டாக்டர் ஷர்மிளா, இயக்குநர் ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யதேவ் பின்னணி இசைக்கும் தாஜ்நூர் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார்கள்.

4. ஒரு ஊர்ல

DSC_5561

இசைஞானி இளையராஜாவின் 999-வது படம் என்ற அடைமொழியோடு இந்தப் படம் வெளியாகியுள்ளது. விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.எஸ். வசந்தகுமார் இயக்கியிருக்கிறார். வெங்கடேஷ், நேகா பட்டேல், பேபி சௌந்தர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது இல்லாமல்………..

5. வேங்கை புலி

6. வேட்டை 

ஆகிய இரண்டு தெலுங்கு டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.

மேலும்

7. Airplane Vs. Volcano 

8. Need For Speed 

ஆகிய இரண்டு ஆங்கில டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.

Our Score