வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று ‘கானா’ பாடலில்தான் அமைந்து இருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ் படிக்கட்டு, பேருந்து, டிபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதை வேண்டுமானாலும் இசைக் கருவியாக ஆக்கிக் கொள்வதுதான் இந்த கானா பாடல்களின் தனி சிறப்பு.
போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும், குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும், மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை இந்தக் ‘கானா’ பாடல்களுக்கு உண்டு.
அந்தக் ‘கானா’ பாடல்களின் ஒரு வகையான இறப்பின்போது பாடக் கூடிய ‘மரண கானா’வில் கை தேர்ந்தவர் மரண கானா விஜி. “வாழும்போது வைக்காதடா சேத்து, ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் வரிகள் இவை. ‘டங்கமாரி ஊதாரி’ பாடலை பாடிய இவர் முதன்முதலாக முகம் காட்டியுள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’. இந்தப் படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை அவரே எழுதி, பாடி, நடித்தும் உள்ளார்.
S.T.குணசேகரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில். நிதின் சத்யா, ரேக்சா ராஜா மற்றும் யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
மக்களின் பெரும் ஆர்வத்தை தூண்டிய வண்ணம் உள்ள இந்த திரைப்படம், வரும் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளது.









