‘கோ-2’ படத்தில் லியான் ஜேம்ஸின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்..!

‘கோ-2’ படத்தில் லியான் ஜேம்ஸின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்..!

மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும், பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும்போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது.  

சினிமாவின் இதயமாக கருதப்படும் அப்படிப்பட்ட  இசையை புதிய கோணத்தில் ‘கோ 2’ திரைப்படம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார் இளம் இசை அமைப்பாளர் லியான் ஜேம்ஸ். 

RS இன்போடைன்மென்ட் எல்ரட் குமார் தயாரித்து, சரத் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  லியான் ஜேம்ஸ் மற்றும் நீத்தி மோகனின் மனதை மயக்கும் குரலில் பிறந்த ‘கோகிலா’ என்ற பாடல், இசை பிரியர்கள் மட்டுமில்லாது, அனைத்து பொது நிலை மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

‘விவாதா’ என்ற ஆல்பத்தின் இரண்டாவது பாடல் ‘ஹிப்ஹாப்’ வகையில் உருவாக்கப்படுள்ளது. மேற்கத்திய இசை கருவிகளை மிக அழகாக நம் தமிழ் மொழியோடு ஒன்று சேர்த்து, லியான் ஜேம்ஸ் மற்றும் விஷால் டாட்லனி ஆகியோரின் குரலில் உருவான இந்த பாடல், படத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

தற்போதைய நாட்களில் அனைத்து இளைஞர்களின் செல்போன்களிலும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல், இன்னோ ஜார்ஜ் மற்றும் சின்மையின் மெல்லிசை குரலில் உருவான ‘கண்ணம்மா’ பாடல். இந்த பாடலின் மற்றொரு பதிப்பை சலீம் மெர்ச்சண்ட் பாடியுள்ளார். இப்படி படத்தில் உள்ள ஆறு பாடல்களுமே தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.

‘கோ 2’ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியிடப்பட்டது, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் மற்றும் சர்கம் பாடகர் குழுவினரின் குரலில் உருவான ‘உன்னை மாற்றினால்’ என்னும் பாடல். இந்த பாடல் காலம் சென்ற முன்னாள் ஜானதிபதி ஐயா A.P.J.அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக படைக்கப்பட்டுள்ளது.

leon james-1

இந்த பாடல் உருவானவிதம் பற்றி இளம் இசையமைப்பாளர்  லியான் ஜேம்ஸ் கூறுகையில், “படத்தின் கதைப்படி எங்களுக்கு ஓர் உணர்சிகரமான பாடல் தேவைப்பட்டது. அப்படி நாங்கள் யோசித்து கொண்டிருக்கும் வேளையில்தான், இயக்குனர் சரத் அவர்கள் இந்த அருமையான யோசனையை சொன்னார்.

இதை நாங்கள் நா முத்துகுமார் சாரிடம் சொல்ல, அவர் இந்த அழகிய படைப்பின் பாடல் வரிகளை எழுதினார். ஐயா அப்துல் கலாம் அவர்களுக்காக நான் இசை அமைத்ததை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்.”  என்றார்.  

இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனைவரும், படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் வெகுவாக பாரட்டியுள்ளனர். லியான் ஜேம்ஸின் இசை கண்டிப்பாக ‘கோ 2’ திரைப்படத்திற்கு ஓர் வலிமை வாய்ந்த  தூணாக அமைந்துள்ளது என்பதை உறுதியாக சொல்லாம்.

அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும், ‘கோ 2’ திரைப்படம் வரும் மே 13-ம் தேதி வெளியாகிறது.

Our Score