ABICKA ARTS நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் வித்தியாசமான வகையில் ஆக்சன், திரில்லர், கலந்த ஹாரர் படமாக உருவாகி வருகிறது ‘மறைமுகம்’ திரைப்படம்.
இத்திரைப்படம் 70 வருட கால தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய கதைக் களம் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும், நிஷித்தா தனுஜா கதாநாயகியாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும் காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி தேவி, கண்ணன், ஜீவகன், உமேரா பேகம். குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஜய் திருமூலம், இசை – வசந்த். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல், எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் A.P.ஷர்வின். இவர் ஏற்கனவே ‘துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ என்ற இரு படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை வி.ஜீவகன், A.P.ஷர்வின் இணைந்து தயாரிக்க, உமேரா பேகம் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.









