full screen background image

ஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் இணையும் மஞ்சு வாரியர்!

ஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் இணையும் மஞ்சு வாரியர்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா,  கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்டமான  படமான ‘Mr.X ‘ படத்தில் மஞ்சு வாரியார் இணைந்துள்ளார்.

முதல் படத்திலேயே கோலிவுட்டை தனது திரைக்கதை, இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப்.ஐ.ஆர். படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார்.

Mr X படம் பல்வேறு  நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. இதற்காகவே நாயகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக்  உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர். திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்கிறார் தன்வீர் மிர். படத் தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும்,  கலை இயக்கம் இந்துலால் கவீத்தும், ஆடை வடிவமைப்பை உத்தரா மேனனும் கவனிக்கின்றனர். தயாரிப்பு மேற்பார்வை – A.P. பால் பாண்டி, நிர்வாகத் தயாரிப்பு – ஷ்ரவந்தி சாய்நாத், இணை தயாரிப்பாளர் A.வெங்கடேஷ், பத்திரிகை தொடர்பு – ஏ.ஜான்.

இந்த Mr. X தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Mr.X-ன்  மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் பூஜை இன்று படக் குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது.

Our Score