‘கடல்’ படத்திற்கு பின்பு அடுத்து இந்திய அளவில் மிகப் பெரிய பட்ஜெட் படத்தினை செய்ய மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் மகேஷ்பாபு, நாகார்ஜூனா இருவரையும் வளைத்தார். மணி ஸாரின் இயக்கத்தில் நடிக்க ரொம்பவும் ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்லியிருந்தார் மகேஷ்பாபு.
இவர்களுடன் ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன், சமந்தாவையும் நடிக்க வைக்கப் போவதாகச் செய்திகள் கசிந்தன. எப்போது ஷூட்டிங் என்பது மட்டும் தெரியாமல் பிராஜெக்ட் உறுதி என்றே மீடியாக்களிடமும் உறுதி செய்யப்பட்டது.
இப்போது இத்திட்டம் பணாலாகிவிட்டதும் உறுதியாகிவிட்டது.. நேற்றைக்கு நாகார்ஜூனாதான் இதனை வெளியில் சொல்லியிருக்கிறார்.
மீடியாக்கள் விசாரித்தவரையிலும் படத்தின் கதையிலும், சம்பளப் பிரச்சினையிலும் மகேஷ்பாபுவுக்கும், மணிரத்னத்திற்கும் தீராத பனிப்போர் துவக்கத்தில் இருந்தே இருந்து வந்ததாம். இதனைச் சமாளிக்க முடியாமல் திட்டத்தையே தூக்கிப் பரணில் போட்டுவிட்டாராம் மணி.
இனி மணியின் அடுத்த பிராஜெக்ட்டில் சிக்கப் போகும் ஸ்டார்கள் யாரோ..?