full screen background image

தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் மந்த்ரா பேடி..!

தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் மந்த்ரா பேடி..!

மந்த்ரா பேடியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

தனது மந்தகாச சிரிப்பினாலும், ஓயாத பேச்சினாலும் மந்த்ரா பேடி மிக எளிதாக இந்தியாவில் பிரபலமானார். 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக்க் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது வர்ண்னையாளராக பணியாற்றி, கிரிக்கெட்டை இன்னமும் அதிகப்படியாக.. கிரிக்கெட்டையே விரும்பாதவர்களைக்கூட தனது குறைச்சலான, ஆனால் கவர்ச்சியான ஆடைகளால் தொலைக்காட்சியில் பார்க்க வைத்து  பிரபலமாக்கியவர்.

adangathey-movie-shooting-spot-stills-8

இதற்கடுத்து தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் மைதானத்தில் மைக்குடன் களமிறங்கி கிரிக்கெட்டை வாழ வைத்த வர்ணனையாளர்.

துவக்கத்தில் டிவி சீரியல்களில் நடிக்கத் துவங்கி பின்புதான் கிரிக்கெட்டு வந்தார். கிரிக்கெட்டிலும் அலை ஓய்ந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார் மந்த்ரா பேடி. கூடவே, பேஷன் ஷோக்களில் அதிகமாக கலந்து கொண்டு லட்சணக்கான இந்திய ஆண்களின் கனவுகளில் வலுக்கட்டாயமாக வந்து போனார்.

mandhira-bedi-3

1999-ம் ஆண்டு மந்த்ரா பேடி, ராஜ் கெளஸல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இப்போது 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான்.

தொலைக்காட்சி தொடர்களுக்கிடையில் சில திரைப்படங்களிலும் நடித்தார் மந்த்ரா பேடி. சிம்பு தனது ‘மன்மதன்’ படத்தில் இவருக்காகவே ஒரு மருத்துவர் வேடத்தை கிரியேட் செய்து அதில் நடிக்க வைத்து பெருமைப்பட்டுக் கொண்டார். அந்த ஒரு படத்தோடு தமிழுக்கு குட்பை சொல்லிவிட்டு போன மந்த்ரா பேடி, இப்போது மீண்டும் ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னையில் கால் பதித்திருக்கிறார்.

adangathey-movie-shooting-spot-stills-17

ஜி.வி.பிரகாஷ்குமார், சுரபி, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘அடங்காதே’ படத்தில்தான் மந்த்ரா பேடியும் ஒரு நல்ல கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக இன்று காலை சென்னையில் நடைபெற்ற பூஜையிலும் அதைத் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பிலும் மந்த்ரா பேடி கலந்து கொண்டார்.

நல்வரவாகட்டும்..!

Our Score