full screen background image

புதுமுகங்கள் நடிக்கும் ‘மானசி’

புதுமுகங்கள் நடிக்கும் ‘மானசி’

மூவி மேஷன்ஸ் மற்றும் எம்.ஜே. பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம்  ‘மானசி.’

இந்தப் படத்தில் நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் ஹாரிசா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மற்றும் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வசனம்   –  இருவி, ஒளிப்பதிவு   –  கண்ணன் பட்டேல், இசை   –  ஷிவ்ராம்,  பாடல்கள்   –  திண்டுக்கல் சாமிநாதன், கலை – அஜெயன்,  நடனம் – விவேக், எடிட்டிங்    –  அச்சு விஜயன்,  தயாரிப்பு மேற்பார்வை  –  பி.முத்தையா. கதை, திரைக்கதை. இயக்கம் – நவாஸ் சுலைமான். இவர் மலையாளத்தில் பிரபலமான கமல், பாசில் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  தயாரிப்பு – A.பாஹின் முகமது, மேத்யூ ஜோசப்.

படம் பற்றி இயக்குநர் நவாஸ் சுலைமான் பேசும்போது,  “கதாநாயகன் நரேஷ்குமாரின் குலத் தொழிலே ஆடு மேய்ப்பதுதான். ஆனால் அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாகத்தான் கருதுகிறான். அவனை பொறுத்தவரை அந்த ஆடுகள் யாருக்கும் தீங்கு நினைக்காத ஜீவராசிகள் என்பதுதான். அப்படி நினைக்கிற அவனை ஒரு ஆடு காணாமல்போய் பதற வைக்கிறது. காணமல் போன அந்த ஆடு கிடைத்ததா..? இல்லையா..? என்பதை காதல், நகைச்சுவை கலந்து உருவாக்கி உள்ளோம்.

உயிரோட்டமான கமர்ஷியல் படைப்பான ‘மானசி’ தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, ஊத்துக்காடு, கோம்பை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உருவாகி உள்ளது..” என்றார்.

Our Score