1980-களில் தமிழ்த் திரையுலகத்தைக் கலக்கிய நடிகைகளான அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி ஆகிய மூவரும் தற்போது முதல்முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மல்லி’ என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.
இத்தொடரை சரிகம நிறுவனத்தின் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
இத்தொடரில் மேலும் விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், மதன்பாப், தேவ் ஆனந்த், வெங்கட், கிருத்திகா, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னனி நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.
திரைக்கதை & வசனம் – தமயந்தி, ஒளிப்பதிவு – விஸ்வநாத், இசை – தரண், இயக்கம் – ஸ்டாலின், படைப்பாக்கம் – நீடா கே.சண்முகம், படைப்பாக்கத் தலைமை – ப்ரின்ஸ் இம்மானுவேல்.
நாயகன், நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும், நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும், டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா.
இந்த மூன்று முன்னாள் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும், திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணிக்கிறது ‘மல்லி’ மெகாத் தொடர்.
திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணிவரை சன் டிவியில் இத்தொடர் ஒளிபரப்பாகும்.













