full screen background image

ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம்

ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம்

இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகி தற்போது ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. வைபவ், வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுடன் கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – பிரேம்ஜி, கலை – கதிர், எழுத்து, இயக்கம் – ராதா மோகன்.

இப்படம் முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் கருணாகரன்.

அவர் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது, “இயக்குநர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு’ படத்தில் என்னை நாயகனாக அறிமுகுபடுத்திய அவருக்கு நான் என்றென்றும்  கடமைப்பட்டு இருக்கிறேன்.

குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. மலேசியா to அம்னீஷியா படத்தில்கூட அவரது கைவண்ணம்  நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும்.” என்று உற்சாகம் குறையாத உவகையுடன் கூறினார் கருணாகரன்.

கடந்த மே 28-ம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் பொது மக்களிடையே பெரும்  வரவேற்பு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Our Score