full screen background image

பள்ளி, கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘மய்யம்’ திரைப்படம்

பள்ளி, கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘மய்யம்’ திரைப்படம்

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான ஓவியர் ஸ்ரீதர், கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்காக நடத்தி வரும் ‘மய்யம்’ என்கிற பத்திரிகையின் தலைப்பை அவரிடத்திலேயே கடனாகப் பெற்று அத்தலைப்பில் ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.

IMG_4968 copy

இத்திரைப்படத்தில் பங்கெடுத்திருக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘மய்யம்’ திரைப்படத்தில், நவீன் சஞ்சய், குமரன் தங்கராஜன், ஹாஷிம் ஜெயின், ஜெய் குஹானி, முருகான்ந்தம், பூஜா தேவரியா, சுகாசினி குமரன், இவர்களூடன் முக்கிய வேடத்தில் ‘ரோபோ’ ஷங்கரும் நடித்திருக்கிறார்.

IMG_3850 copy

ஓளிப்பதிவு – மார்ட்டின், அப்பு, இசை – கே.ஆர்., படத் தொகுப்பு – கார்த்திக் மனோரமா,  கலை – அபிமன்யூ, நடனம் – விஜி சத்தீஷ், ஸ்டண்ட் – ஹார்ஸ் சுரேஷ், பாடல்கள் – மோகன்ராஜன், அருண் ராஜா, காமராஜ், தயாரிப்பு நிர்வாகி – M.K. சாயி சுந்தர், மக்கள் தொடர்பு – நிகில், LAB – ரியல் இமேஜ்,  வசனம் – T. முருகானந்தம், கதை, திரைக்கதை – AP ஸ்ரீதர்,  தயாரிப்பு –  ஹார்வேஸ்ட்  எண்டர்டெயினர்ஸ் & ஸ்கெட்ச் புக் புரொடக்ஷன்ஸ்.

இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு கல்லூரிகளின் தொழில் நுட்ப்ப் பிரிவுகளில் பயன்று வரும் மாணவ, மாணவிகளே பணியாற்றியிருக்கிறார்கள். இது இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முயற்சி என்கிறார் இயக்குநர் ஏ.பி.ஸ்ரீதர்.

இத்திரைப்படத்தில் பங்கெடுத்துக் கொண்ட கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் பட்டியல் இது :

1. ஆதித்யா பாஸ்கரன், இயக்குனர். 4-ம் ஆண்டு பொறியியல், SRM பல்கலைக் கழகம்.

2. கே.ஆர், (இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி மகன்) –  பாடல்கள், இசை, – 2-ம் ஆண்டு VISCOM, SRM பல்கலைக் கழகம்.

3. ஹாஷிம் ஜெயின், நடிகர், இறுதியாண்டு VISCOM, SRM பல்கலைக் கழகம்.

4. ஃபிர்னாஸ் ஹுசைன், B-ROLL ஒளிப்பதிவாளர் (MAKING) 2-ம் ஆண்டு VISCOM புனித பாட்ரிஷியன் கல்லூரி.

5. பிரேம் ஷங்கர், CONCEPT (மானிடா, தலைப்பு பாடல்) இறுதியாண்டு பொறியியல், கிண்டி பொறியியல் கல்லூரி.

6. வருணா ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பு, பத்தாம் வகுப்பு, AMM மேல்நிலைப் பள்ளி.

7. நந்த கிஷோர், உதவி இயக்குனர், 2-ம் ஆண்டு, FILM TECHNOLOGY, சிவாஜி கணேசன் INSTITUTE OF FILM TECHNOLOGY.

8. நமிதாசப் கோட்டா, உதவி இயக்குனர், 2-ம் ஆண்டு ELETRONIC MEDIA, MOP வைஷ்ணவா கல்லூரி.

9. பரக் சாப்ரா, பாடகர் (மானிடா, தலைப்பு பாடல்) KM MUSIC CONSERVATORY.

10. ஆர்த்தி பட்நாகர், நடனம் (மானிடா, தலைப்பு பாடல்) இறுதியாண்டு, கட்டிடவியல், BMS கல்லூரி, பெங்களூர்.

11. ராஜ்லட்சுமி, நடனம் (மய்யம் PROMO SONG) MOP வைஷ்ணவா கல்லூரி.

12. அவ்லின், நடனம் (மய்யம் PROMO SONG) ஜெயின் கல்லூரி, தி.நகர்.

“இந்த புதுமையான முயற்சி தனது நீண்ட நாள் கனவு…” என்கிறார் ஓவியர் ஸ்ரீதர். இந்தக் கனவு நனவானவிதம் எப்படி என்பது பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

_FI_0539 copy

“இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் தொடங்கி வைத்த எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்க்டெச் புக் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எனது தயாரிப்பான ‘மய்யம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து அதன் அடுத்த கட்டப் பணிகளில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர்தான் அதிகமாக திரைப்படங்களை பற்றிய கமெண்ட்டுகளை எழுதுகிறார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள். சினிமா பற்றிய ஆர்வத்திலும், புரிதலிலும் அவர்களுக்கென்றே தனி எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதனை நன்கு பயன்படுத்தி அவர்களை வைத்தே ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் இந்தப் படம்.

_FI_6200 copy

இது காதல், நகைச்சுவை மற்றும் திகில் கலந்த கதையம்சம் கொண்ட படம்.  வாசலிலேயே ஏ.டி.எம்.மை வைத்திருக்கும் ஒரு வங்கிக்குள்தான் முழு படமுமே நடக்கிறது. காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை ஆறு மணிக்கு முடியும்.  24 மணி நேரத்தில் அந்த வங்கிக்குள் நடக்கும் கொள்ளை மற்றும் கொலையே படத்தின் கதைக்களம்.

நாட்டில் இப்போது நடைபெறும் ஏ.டி.எம். கொள்ளைகள், கொலைகள் ஏன் நடக்குது..? எப்படி நடக்குது..? வங்கிகளின் அலட்சிய உணர்வுதான் இதற்குக் காரணமா என்பதையெல்லாம் படத்தில் சொல்லியிருக்கிறோம். இன்னிக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒரு பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கும் அதே நேரம் காமெடி, திரில் இருக்கும்படியாக திரைக்கதையும், இயக்கமும் இருக்கிறது. கடைசியா ஒண்ணு..  நாங்கள் புதிதாக ஏ.டி.எம். கொள்ளைக்கு ஐடியா எதையும் படத்தில் கொடுக்கவில்லை. இதை முக்கியமா நோட் பண்ணி எழுதுங்க..” என்றார் தயாரிப்பாளரும், கதாசிரியருமான ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

எழுதிட்டோம் ஸார்..!

Our Score