full screen background image

தெலுங்கில் தோல்வியடைந்த படம் தமிழில் ஓடிடியில் வெளியாகிறதாம்

தெலுங்கில் தோல்வியடைந்த படம் தமிழில் ஓடிடியில் வெளியாகிறதாம்

தமிழ், தெலுங்கில் தயாரான ஒரு படம் தெலுங்கில் படு தோல்வியை சந்தித்ததால் தமிழில் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகிறது.

சித்தார்த், ஷர்வானந்த் நடிப்பில் அதிதி ராவ் ஹைதிரி, அனு இம்மானுவேல் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு படமாக உருவானது மகா சமுத்திரம்’ திரைப்படம்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு கொரோனாவின் இரண்டாம் கட்ட லாக் டவுனுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14-ம் தேதி ஆந்திரா, மற்றும் தெலுங்கானாலாவில் வெளியானது. ஆனால் எதிர்பாராதவிதமாக படம் படுதோல்வியடைந்தது.

தற்போது இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகக் காத்துக் கொண்டிருந்தது. சித்தார்த் நடித்திருந்ததால் தமிழுக்கும் கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பாளர் முன்பேயே திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கடைசியில் தெலுங்கில் ஏற்பட்ட அடியை யோசித்துப் பார்த்தவர்கள் தமிழுக்குக் கொண்டு வந்து மேலும் அடி வாங்குவதைவிடவும் நேரடியாக தமிழ்ப் பதிப்பை ஓடிடியில் வெளியிட்டால் என்ன என்று யோசித்திருக்கிறார்கள்.

இதன் விளைவாக இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக இன்றைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புத்திசாலி தயாரிப்பாளர்கள்..!

Our Score