சிரிக்க வைக்கும் பேய்ப் படம் ‘மேகி என்கிற மரகதவல்லி’

சிரிக்க வைக்கும் பேய்ப் படம் ‘மேகி என்கிற மரகதவல்லி’

ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் காமெடி ஹாரர் கலந்த திரைப்படம் ‘மேகி என்கிற மரகதவல்லி.’

இந்தப் படத்தில் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற ‘ஆதித்யா’ செந்தில், ‘காலா’ படப் புகழ் ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக் என பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.

மணிராஜ் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் சிவன் படத்தைத் தொகுத்திருக்கிறார். பிரபாகரன் மற்றும் ஸ்டீவன் சதீஷ் என இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள். கலைக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 

maggy movie POSTER

இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் ஜெகதீஷ் படம் பற்றிப் பேசுகையில், “இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து திகில் சஸ்பென்ஸ் படமாக தயாராகியிருக்கிறது. வழக்கமாக அனைத்து பேய் படங்களிலும் பழிக்கு பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் வரும் பேய் யாரையும் பழி வாங்காது. ஆனால், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் கிடையாது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரைக்கும் இந்த ‘மேகி’ பேயைப் பிடிக்கும்…” என்கிறார் நம்பிக்கையுடன்..! 

கொடைக்கானல் மற்றும் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருபது நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளது.

Our Score