full screen background image

வருண் தேஜின் ‘மட்கா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது!

வருண் தேஜின் ‘மட்கா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம், வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது !

இந்தப் படத்தில் வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கருணா குமார், தயாரிப்பாளர்கள் – மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, பேனர் – வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – பிரியசேத், படத்தொகுப்பு – கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.R, தயாரிப்பு வடிவமைப்பு – ஆஷிஷ் தேஜா, கலை இயக்கம் – சுரேஷ், நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ், மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா.

வருண் தேஜின் திரை வரலாற்றில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுவாகும். இந்த மட்கா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்திய படக் குழு தற்போது செகண்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். வருண் தேஜ் இந்த போஸ்டேரில் ரெட்ரோ அவதாரத்தில் அசத்தலான உடையில், வாயில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் நடந்து கொண்டு, நேர்த்தியுடன் காட்சியளிக்கிறார்.

வருண் தேஜ் அவரது கதாபாத்திரத்தின் பரிணாமத்தை அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அசத்துகிறார்.

1958 மற்றும் 1982க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 1950-களில் இருந்து 1980-கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.

24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார். வருண் தேஜின் மாறுபட்ட தோற்றம் ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒர்க்கிங் ஸ்டில்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்தப் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக் ​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப் படமாக்கி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இந்த ‘மட்கா’ திரைப்படம், வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது !

 

Our Score