பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு தேர்தல் நடத்தும் தேர்தல் கமிஷன், வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் விளம்பரப் படத்திற்காகவும் மக்கள் பணத்தில் இருந்து சில கோடிகளை வாரியிறைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சில தனியார் அமைப்புகள் மக்களுக்கான விழிப்புணர்வு என்ற பெயரில் தங்களுடைய மன அரிப்புகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் நடிகை மதுஷாலினியை நடிக்க வைத்து இவர்கள் எடுத்திருக்கும் வாக்காளர் விழிப்புணர்ச்சி படம்..
இயக்குனர் பாலா இயக்கிய “அவன் இவன்” திரைப்படம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை மதுஷாலினி.
இவரை வைத்து வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிற பிரச்சார வீடியோவை தயார் செய்திருக்கிறது ஒரு தனியார் அமைப்பு. ஆனால் மூன்றாம்தரமான பிட்டு படங்களில் படுக்கையறைக் காட்சிகள் எடுக்கப்படும் சூழலில்.. அது போன்ற ஹன்ஸி வாய்ஸில் மதுஷாலினியை பேச வைத்து.. வேறு ஒரு டபுள் மீனிங் வருவதை போல இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்..
இந்த விளம்பரத்தில் மதுஷாலினி பேசுகின்ற பேச்சுக்களே விரசமான வடிவத்தை உணர்த்துவது போலவே உள்ளன. “சென்ற முறை நான் என்னுடைய விரலை பயன்படுத்தினேன். மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது என்னுடைய விரலை நான் கவனமாக பயன்படுத்தியுள்ளேன். தற்போது எனக்கு மிகவும் பிரமிக்கதக்க அனுபவம் கிடைத்துள்ளது. என்னைப் போலவே நீங்களும் சுகமான அனுபவம் பெற உங்கள் விரலை பயன்படுத்துங்கள். விரலை பயன்படுத்தி தவறாமல் வாக்களியுங்கள்” என்று கூறுகிறார்.
மிக மிக செக்ஸியான குரலில் மதுஷாலினி பேசியிருக்கும் இந்தப் பேச்சை கேட்பவர்கள் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வார்கள் இது டபுள் மீனிங்குதான் என்று.. இப்படியெல்லாம் வாக்காளர் விழிப்புணர்வை புகுத்த வேண்டு்ம் என்று யார் சொன்னது..?
எது, எதற்கோ தடை விதிக்கும் தேர்தல் கமிஷன், இந்த வீடியோவுக்கும் நிச்சயமாக தடை விதிக்க வேண்டும்..!
நன்றி : Mango Videos & Telugu Filmnagar