full screen background image

மதகஜராஜா மார்ச்-7 ரிலீஸ்..!

மதகஜராஜா மார்ச்-7 ரிலீஸ்..!

அப்பாடா…! ஒரு வழியாய் விஷாலின் ‘மதகஜராஜா’ வரும் மார்ச் 7-ம் தேதியன்று ரிலீஸாகப் போகிறது.. இந்தப் படத்தினால் விஷாலுக்கு கிடைத்த மண்டை குடைச்சல், வேறு எந்த விஷயத்திலும் அவருக்குக் கிடைத்திருக்காது..

விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சோனுசூட், மணிவண்ணன், சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் என்று நட்சத்திரப் பட்டாளம் நிறையவே இருக்கிறார்கள்.. இதில் ஆர்யா கெஸ்ட் ரோலும் செய்திருக்கிறாராம். சதா ஒரு குத்துப் பாடலுக்கு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறாராம்..! மறைந்த இயக்குநர் மணிவண்ணன் நடித்து கடைசியாக வெளிவரவிருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.. விஜய் ஆண்ட்டனி இசையமைக்க.. ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவின்-ஸ்ரீகாந்த் இருவரும் எடிட்டிங் செய்திருக்கிறார்கள். சுந்தர் சி. எழுதி, இயக்கியிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படம் சென்ற ஆண்டு பொங்கலன்றே வெளிவந்திருக்க வேண்டியது. போடா போடி படத்தின்போதே இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. பின்பு 2013 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் சமர் திரைப்படம் வெளியாக.. இது மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸ் என்று மிக உறுதியாகச் சொல்லப்பட்டிருந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளரான ஜெமினி கலர் லேப்பிடம் இருந்து விஷால் தானே இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முன்வந்தார். ஆனால் ஜெமினி லேப் கொடுக்க வேண்டிய பணம் என்று சொல்லி சில கோடிகளை விநியோகஸ்தர்கள் விஷாலிடம் கேட்க.. அதிரடியாக ஒரு கோடி ரூபாய்வரைக்கும் செலவு செய்து பிரமோட் செய்த நிலையிலும் படத்தை ஒத்திப் போட்டார் விஷால்.

இப்போது திடுதிப்பென்று மதகஜராஜா சட்டென்று முன்னுக்கு வந்திருக்கிறார். நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் இப்படத்தை வாங்கி விநியோகம் செய்ய முன் வந்திருக்கிறாராம்.. நிச்சயமாக மார்ச்-7-ம் தேதியன்று படம் ரிலீஸ் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்..

வாங்க.. வாங்க.. இந்தப் படத்தின் பிரமோஷனை காரணமாக வைத்தாவது அஞ்சலி சென்னையில் கால் வைப்பாரா என்று பார்ப்போம்..!

Our Score