full screen background image

டைவர்ஸ் செய்தி வதந்திதான் – இயக்குநர் பிரியதர்ஷன் பேட்டி..!

டைவர்ஸ் செய்தி வதந்திதான் – இயக்குநர் பிரியதர்ஷன் பேட்டி..!

இந்தச் செய்தி காதுகளுக்கு வந்தபோது நிச்சயம் உண்மையாக இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கத் தோன்றியது.. மலையாளப் படவுலகில் நீண்ட நாள் ஆதர்ச காதல் தம்பதிகளாக இன்றுவரையிலும் இருப்பவர்களில் இயக்குநர் பிரியதர்ஷன்-லிஸி ஜோடியும் ஒன்று.. இவர்கள் பிரிந்துவிட்டார்கள்.. டைவர்ஸுக்கு மனு அளிக்கப் போகிறார்கள்.. 80 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக கேட்கிறார் லிஸி என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. லிஸியோ இது பற்றி தெளிவாக எதுவும் சொல்லாமல் “இப்போதைக்கு என் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன். மீடியாக்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கணும்..” என்று பூடகமாகவே சொல்லியிருக்கிறார்.

பிரியதர்ஷனை லிஸி விரும்பி மணமுடித்ததே பெரிய சர்ச்சையில்தான். ‘சித்ரம்’ படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு 4 ஆண்டு கால காதலை கல்யாணத்துக்கு கொண்டு வர விரும்பினார் லிஸி. ஏனோ பிரியதர்ஷன் தன் குடும்பத்தார் ஏற்கவில்லை என்று சொல்லி இதற்கு மறுக்க.. லிஸி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இதன் பின்பு ஒட்டு மொத்த மலையாள சினிமாவுலகமும் பஞ்சாயத்து செய்து திருமணத்தை நடத்திவைத்தது..

Priyan-lizzy

அதுவரையிலும் கிறிஸ்தவராக இருந்த லிஸி கல்யாணத்திற்கு பின்பு லஷ்மி என்று பெயர் மாற்றி இந்துவாக தன்னை மாற்றிக் கொண்டார்.. கல்யாணி, சித்தார்த் என்ற இரண்டு பிள்ளைகள். இப்போது இருவருமே அமெரிக்காவில் படித்து வருகிறார்களாம். பிரியதர்ஷனை பொறுத்தவரையில் இந்திய அளவிலேயே சினிமாவை வர்த்தக ரீதியாக அணுகுவது எப்படி..? தன்னுடைய திறமையை பிராடெக்ட்டா நினைத்து அதனை மார்க்கெட்டிங் செய்து சேல்ஸ் செய்யும் வித்தையை கச்சிதமாக செய்து கை தேர்ந்த தொழிலதிபராக ஆனவர்.

ஒரு படத்திற்கு வெறும் 2 லட்சம் சம்பளமே வாங்க வேண்டிய சூழல் இருக்கின்ற மாநிலத்தில் இருந்து தொழிலை அபிவிருத்தி செய்ய.. தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்துக்கும் பறந்து, பறந்து சம்பாதித்தார். வளைகுடா நாடுகளுக்கு நட்சத்திரங்களை அழைத்துச் சென்று நிகழ்ச்சி நடத்தும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்டில் நுழைந்து இவர் காட்டிய வழியை இன்றைக்கு பல நட்சத்திரங்களும் பின்பற்றுகிறார்கள். சம்பாதித்த பணத்தில் பிரியதர்ஷன் செய்த முதலீடுகள் இன்றைக்கு 100 கோடி கிளப்பில் அவரது குடும்பத்தினரைச் சேர்த்திருக்கிறது.. இவருடைய சம்பாதிக்கும் வழி காட்டுதலை பார்த்துதான் மோகன்லாலும், மம்முட்டியும் இப்போதுவரையிலும் தமிழ்ச் சினிமா நடிகர்களைவிட அதிகமாகவே திரைக்குப் பின்னால் உழைத்து சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.

யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை.. போன வருஷம்வரைக்கும் எதுவும் தெரியலை. இப்போது சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் செலிபரெட்டி கிரிக்கெட் போட்டிகளில் லிஸி-பிரியதர்ஷன் இருவருக்கும் சொந்தமான கேரள ஸ்டிரைக்கர்ஸ் ஆடும் ஆட்டங்களின்போது மைதானத்தில் லிஸியை பார்க்க முடியவில்லை. முதல் 2 போட்டிகளுக்கு மட்டுமே வந்திருந்ததாகத் தகவல். ஏன் வரவில்லை என்று விசாரிக்கத் தொடங்க.. கடைசியில் டைவர்ஸ் செய்தி தீயாகப் பரவிவிட்டது. இதற்கான காரணமாக வெளியில் சொல்லப்பட்ட ஒரு செய்திதான் சம்பந்தப்பட்டவர்களை பெரிதும் சங்கடப்படுத்தியது..!

“இது பெரிய விஷயமில்லை. ச்சும்மா எல்லா தம்பதிகளுக்கும் இடைல வர்ற ஈகோ பிராப்ளம்தான்.. பேசிக்கிட்டிருக்கோம்.. சரியாயிரும்.. டைவர்ஸ் என்ற கேள்வியே இங்கே இல்லை..” என்று பிரியதர்ஷன் சொல்லியிருக்கிறார். கடைசியில் “லிஸிக்கு வேறொருவருடன் உறவு என்கிற செய்தியிலும் உண்மையில்லை.. அது மிகப் பெரிய கொடூரமான வதந்தி..” என்று அவரே சொல்லியிருக்கிறார்.

எந்தக் கணவனுக்கும் இப்படியொரு பேட்டி கொடுக்கும் நிலைமை வரக் கூடாதுதான். ஆனால் பிரியதர்ஷனுக்கு வந்துவிட்டது.. பாவம்..!

Our Score