full screen background image

‘மாயோன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

‘மாயோன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் ‘மாயோன்’.

இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

படத்திற்கு ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இயக்குநர் என்.கிஷோரின் பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். இயக்குநர் என்.கிஷோர் படத்தை இயக்கியிருக்கிறார்.

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தத் தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது.

படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் படத்தினைப் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கினர்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக் களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த ‘மாயோன்’ திரைப்படம், வரும் ஜூன் 17-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத் திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணர்ந்து நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ‘மாயோன்’ படத்தின் வெளியீட்டை அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 
Our Score