சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’.
இதில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், விக்ராந்த், யோகி பாபு, ஜி.எம்.குமார், சுப்பு பஞ்சு, ரோஷினி பிரகாஷ், அர்ச்சனா கொட்டிகே, தீப்ஷிகா, அஷ்வின் ரமாபா நேசன், பிரத்பல் ஹாசன், கோட்பால் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு: சேகர் சந்திரா, கலை: சிவகுமார், இசை மற்றும் பின்னணி இசை: அஜனீஷ் லோக்நாத் , படத்தொகுப்பு: எஸ்.ஆர்.கணேஷ் பாபு, பத்திரிக்கை தொடர்பு: டி ஒன், சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.
அரிவாள், துப்பாக்கி களை வைத்து அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, திருட்டு கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சமூக விரோத செயல்களை செய்து வரும் ஒரு கூட்டத்தின் தலைவன் ஜி.எம்.குமார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒன்று பத்ரா என்ற நவின் சந்திரா. இரண்டாவது ருத்ரா என்ற விக்ராந்த்.
ருத்ரா ஒரு இளம் பெண்ணை காதலித்து வருகிறார். அவளையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால், இதற்கு பத்ரா கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கிறார். அவருடைய அப்பாவும் அந்தக் காதலை எதிர்க்கிறார். ஆனால் காதல் கண்ணை மறைக்க ருத்ரா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடுகிறார். அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொள்கிறார்.
இன்னொரு பக்கம் அன்றைய முதல்வரான லோகநாயகி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சீரியஸாக இருக்கிறார். அவருக்கு பின் அடுத்த முதல்வராக தான் பதவியேற்க வேண்டும் என்று லோகநாயகியின் மகனான லைன் டாம் சாக்கோ நினைக்கிறார். ஆனால் லோகநாயகி “கட்சியில் சீனியராக இருப்பவர்தான் அடுத்த முதல்வராக வேண்டும். நான் உனக்கு ஆதரவு தர மாட்டேன்” என்கிறார். இதனால் கோபப்படும் ஷைன் தன்னுடைய அப்பாவின் உதவினால் தன் அம்மாவை ஆஸ்பத்திரியில் வைத்தே கொலை செய்கிறார் இந்தக் கொலை சம்பவத்தை செல்போனில் படம் எடுத்து விடுகிறார் ஒரு டாக்டர்.
இந்த நேரத்தில் மூர்க்கத்தனமான போலீஸ் அதிகாரியான நாயகன் கிச்சா சுதிப்பை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். சஸ்பெண்ட் ஆன நிலையிலும் கிச்சாவை அழைத்து அந்த வீடியோ இருக்கும் செல்போனை கைப்பற்றம்படி போலீஸ் தலைமையகம் சொல்கிறது.
இந்த நேரத்தில் ஒரே நாளில் 18 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை ருத்ரா கடத்தி வைத்துவிட்டு, குழந்தையை கடத்தும் குழுவினரிடம் மிகப் பெரிய தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ரம்.
இப்போது விக்ரம் கடத்திச் சென்ற ஒரு சிறுவனிடம்தான் முதலமைச்சரை கொலை செய்யும் வீடியோ அடங்கிய செல்போன் இருக்கிறது. அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அந்த படையும் தீவிரமாக தேடி வருகிறது.
முதல்வரின் தனிப்படையின் வேட்டையில் ருத்ரா சுட்டுக் கொல்லப்படுகிறார். ருத்ராவை கொலை செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து பழி வாங்குவேன் என்று பத்ரா சூளுரைக்கிறார். இன்னொரு பக்கம் கீச்சா சுதீப்பும் பந்ராவின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்றும் கடத்தப்பட்ட 18 குழந்தைகளை மீட்டு வருவேன் என்று சொல்லாமல் சொல்லி களத்தில் இறங்குகிறார்.
தான் நினைத்ததை செய்து முடித்தாரா கிச்சா? ருத்ரா பழி வாங்கினானா? அந்த குழந்தைகளை மீட்டார்களா? இல்லையா..? இது எல்லாமும்தான் இந்த மார்க் என்ற படத்தின் திரைக்கதை.
பத்ராவாக நடித்திருக்கும் நவீன் சந்திரா படம் முழுவதும் கோபப்பட்டு கொண்டே இருக்கிறார். கத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு வார்த்தை கூட அமைதியாக, மெதுவாக அவர் பேசவில்லை. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படித்தான் என்றாலும் போகப் போக நமக்கு அந்த கோப பேச்சு எரிச்சலை தருகிறது.
நாயகன் மார்க்காக நடித்திருக்கும் கிச்சா சுதீப் தன்னுடைய ரசிகர்களை வைப் மூடூக்குக் கொண்டு சென்று இருக்கிறார். 24 மணி நேரமும் சிகரெட் குடித்துக் கொண்டே அதை செய்.. இதை செய்.. என்று தன்னுடைய குழுவினருக்கு அறிவுறுத்தி தேடுதல் வேட்டையை நடத்துகிறார். அவருடைய ஸ்டைலான பேச்சும், ஸ்டைலிஷான லுக்கும், அவ்வப்பொழுது கொடுக்கும் பஞ்சு வசனங்களும் அவருடைய ரசிகர்களுக்கு போதுமானது என்ற நினைக்கிறோம்.
ஷான் டைம் சாக்கோ வழக்கம் போல தன்னுடைய வித்தியாசமான நடிப்பினால் கவர்ந்து நிற்கிறார். ஆதிகேசவனாக தன்னுடைய அம்மாவையே கொலை செய்யும் அளவுக்கு துணியும் சாக்கோ கடைசிவரையிலும் அமைதியான வில்லனாகவே நடித்திருக்கிறார்.
கேங்ஸ்டர் குழுவின் தலைவனாக ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தன்னால் முடிந்த ஒரு அழகான நடிப்பை காண்பித்திருக்கிறார்.ருத்ராவாக நடித்திருக்கும் விக்ராந், சில காட்சிகளே இருந்தாலும் அதிகமான அழுத்தமான நடிப்பினை அவர் தரவில்லை.
கிச்சா சுதுப்பின் அணியில் இருக்கும் ரோஷினி பிரகாஷ் வெறும் வசனங்களை மட்டுமே பேசி தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டார். மேலும் தனிப்படை போலீஸூக்கு தலைமை தாங்கும் திரிஷ்னா, இயக்குநர் சொன்னதை மட்டும் செய்து பரபர திரைக்கதைக்கு கொஞ்சம் உதவி இருக்கிறார்.
யோகி பாபு தன் வீட்டில் எப்படி இருப்பாரோ… நண்பர்களிடம் எப்படி பேசுவாரோ.. அதேபோலத்தான் இந்தப் படத்திலும் கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாமல் பேசிவிட்டு போயிருக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகள் அனைவருமே ஒரு கமர்சியல் ஹீரோவின் படத்துக்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் முதலில் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவைத்தான் பாராட்ட வேண்டும் படம் அதிக நேரம் இரவு காட்சிகளாக இருந்தாலும், அந்த இரவு காட்சிகளையே பார்க்கும்படியாக அழகாக படமாக்கி இருக்கிறார், அதிலும் கிச்சா சுதப்பின் கெத்தான தோற்றத்தையும் அவருடைய ஸ்டைலான உடல் மொழியையும் அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார்.
அஜனீஸ் லோக்நாத்தின் இசையில் ‘மஸ்து மலைக்கா’ என்ற திணிக்கப்பட்ட பாடலும், ‘அண்ணன் யார் தெரியுமா’ என்ற பாடலும் கேட்கும்படி உள்ளது. அதே சமயம் பின்னனி இசையில் அடித்து அடி இருக்கிறார் அஜனீஸ். நம் காது கிழிந்ததுதான் மிச்சம்.
சஸ்பென்ஸ், திரில்லர், தேடுதல் வேட்டை என்று படத்தின் திரைக்கதை நகர்ந்து கொண்டே போவதால் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கணேஷ் பாபு.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விஜய் கார்த்தி, கிச்சா சுதீப் போன்ற மிகப் பெரிய ஸ்டார்களுக்கான கதையை தேர்வு செய்து அந்த ஸ்டார்களை எந்த அளவுக்கு மோல்டு செய்தால் அவரது ரசிகர்களுக்கு பிடிக்குமோ, அதையெல்லாம் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.
படத்தின் திரைக்கதை மிக வேகமாக நகர்ந்து சென்றாலும் இடைவேளைக்கு பின்பு அடிக்கடி வருகின்ற அந்த சண்டை காட்சிகளும், ஹீரோவின் டெம்போவை ஏற்றும் திரைக்கதையும் நமக்கு சலிப்பு தட்டி விடுகிறது.
குழந்தைகளை வைத்துக்கொண்டு இப்படி ஒரு ஆபத்தான முறையில் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
இந்தப் படம் யு/ஏ சர்டிபிகேட் பெற்று இருப்பதால் குழந்தைகளும் நிச்சயமாக படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். அவர்களை பயமுறுத்துவது போல காட்சிகளை வைத்திருப்பது தவறானது. இந்த காட்சிகளை சென்சார் போர்டில் எப்படி அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் படத்திற்கு நிச்சயமாக A சர்ட்டிபிகேட்தான் பெற்றிருக்க வேண்டும்! சென்சாரில் எப்படி U/A கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.
ஒரு கமர்சியல் ஹீரோவுக்கு கமர்சியல் ரீதியான திரைப்படங்களை கொடுக்கும்பொழுது இதை விட்டால் வேறு வழியில்லை என்று சொல்வது போல இந்தப் படத்தின் அதீதமான சண்டை காட்சிகளும், அதிகமான இருட்டு பயமுறுத்தல் போன்ற காட்சி அமைப்புகளும் இந்தப் படத்தை அதிகமாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.
RATING : 3 / 5









