‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..!

‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..!

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும்  ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனம் பெற்றுள்ளது, படத்திற்கு மேலும்  பெரும் பலம் சேர்த்துள்ளது.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் தவிர தமிழ்ச் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

பாடல்கள் – கவிஞர் தாமரை,  படத் தொகுப்பு – புவன் ்ரீநிவாசன், ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B., கலை இயக்கம் – அஜயன் ஜலிசரி, ஒலிப்பதிவு – தபஸ் நாயக், விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஸ்பலாட் ஸ்டூடியோ(splat studio), உடைகள் வடிவமைப்பு – ஏக் லகானி, ரெம்யா சுரேஷ், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, லைன் புரொடெக்சன்ஸ் – S.P. cinemas, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோகுல்.K,  

பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற கல்கி’ படத்தினை உருவாக்கி  புகழ் பெற்ற இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர்கள் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இருவரும் பேசும்போது, "தென்னகத்தில் இசைத் துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனத்துடன் நாங்கள் இணைந்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு இசை ஆல்பமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஒரு இசை ஆல்பத்தை அவர்கள் ரசிகர்களிடம் கொண்டு செல்லும்விதம் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. மிகுந்த உழைப்புடன், புத்தம் புது ஐடியாக்களுடன் பட்டித்தொட்டிவரை படத்தின் இசையை கொண்டு சேர்த்துவிடும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் எங்களின் மாறா’ படம் திங்க் மியூசிக்(Think Music)  நிறுவனத்தின் வழியாக வெளியாவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

அதையும் தாண்டி இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் திங்க் மியூசிக் Think Music)  நிறுவனம் இணைந்து வெளியிட்ட முந்தைய ஆல்பங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஜிப்ரானின் முதல் படமான வாகை சூட வா’ படத்தின் பாடல்கள் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனத்தன் மூலமாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்று பம்பர் ஹிட்டானது.

இசை என்ற காதல் கதையில் இந்த இரண்டு பெயர்களும் இணையும்போது ரசிகர்களிடம் அதற்கென்றே ஒரு தனித்த வரவேற்பு எப்போதும் உணடு. அந்த வகையில் மாறா’ படத்தின் மிகப் பெரும் வெற்றியை சொல்லி அடிக்கும் இசை ஆல்பமாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.." என்றார்.