full screen background image

விமல்-அஞ்சலி ஜோடி நடிக்கும் புதிய படம் ‘மாப்ள சிங்கம்’..

விமல்-அஞ்சலி ஜோடி நடிக்கும் புதிய படம் ‘மாப்ள சிங்கம்’..

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘மான் கராத்தே’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் புதிய படம் ‘மாப்ள சிங்கம்’.

இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது. மேலும் சூரி, ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

ஒளிப்பதிவு : தருண் பாலாஜி

படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்

பாடல்கள் : யுகபாரதி

இசை : ரகுநந்தன்

வசனம் : டான் அசோக்

கலை : துரைராஜ்

சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன்

உடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர்

ஸ்டில்ஸ் : ஆனந்த்

தயாரிப்பு மேற்பார்வை : லோகு

இணை தயாரிப்பு : ஜேம்ஸ்

தயாரிப்பு : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், பி. மதன்

நேற்று காலை சென்னை, அனகாபுத்தூர் முருகன் கோவிலில் பூஜையுடன் ‘மாப்ள சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Our Score