ரசிகர்களின் ரசனையை துல்லியமாக கணித்து அதற்கேற்ப படங்களை தயாரிப்பதிலும், வாங்கி வெளியிடுவதில் வல்லுனர்களாக இருக்கும் நிறுவனம் ‘லைகா புரொடெக்சன்ஸ்’. தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக மாறிவரும் இந்த நிறுவனம் தற்பொழுது ‘ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றுள்ளது.
எல்லா வயது ரசிகர்களாலும், மொழிக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் மகேஷ் பாபுவும், திரைக்கதையிலும் இயக்கத்திலும் இந்தியாவே ஆச்சிரியத்தில் பார்க்கும் A.R.முருகதாஸும் முதல் முறையாக ‘ஸ்பைடர்’ படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
‘L L P’ நிறுவனத்திற்காக தாகூர் மது மற்றும் N.V.பிரசாத் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். இவர்களுடன் S.J.சூர்யா, R.J.பாலாஜி, நதியா, பரத், பிரியதர்ஷினி புலி கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உலகத் தரமான ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கொடுத்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் தேர்ந்த படத் தொகுப்பும், பீட்டர் ஹெய்னின் ஹாலிவுட்டுக்கு நிகரான சண்டை காட்சிகளும் ‘ஸ்பைடர்’ படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
வரும் செப்டம்பர் 28-ம் தேதி நவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.