லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 22-வது படத்தின் பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்தப் படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார்.
அதர்வா நாயகனாக நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மேலும் நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் சத்ரு, பாலா சரவணன், ஜி.எம்.குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – ஏ.சற்குணம், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – லோகநாதன், படத் தொகுப்பு – ராஜா முகமது, கலை இயக்கம் – J.K.ஆண்டனி, உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – K.P.சசிகுமார், புகைப்படங்கள் -மூர்த்தி மௌலி, பாடல்கள் – கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடன இயக்கம் – பாபி ஆண்டனி, தயாரிப்பு மேற்பார்வை – M.காந்தன், நிர்வாகத் தயாரிப்பு – சுப்பு நாராயண், தயாரிப்பு வடிவமைப்பு – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சற்குணம் பேசும்போது, “இந்தப் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களைப் போலவே குடும்பப் பின்னணி கொண்ட படம். அதர்வா புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் அதர்வாவின் தாத்தாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ராஜ்கிரண் இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களுடன் நடிக்கவிருக்கிறார்.
வெற்றிலைக்கு நம் கலாச்சாரத்தில் பெரும் முக்கியத்துவம் உண்டு. எனவே படத்தில் நாங்கள் அதைத் தொட்டுள்ளோம், படத்தை ஒரு வெற்றிலைப் பண்ணையிலும், காவேரி நதிக்கு அருகிலும், திருவையாறுவிலும் அதைச் சுற்றியும் படமாக்கவுள்ளோம்…” என்றார் இயக்குநர் சற்குணம்.
இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்க உள்ளது.



