‘லிங்கா’ பட நஷ்ட ஈட்டு விவகாரம் தினமும் ஒரு புதிய டிவிஸ்ட்டை வெளிப்படுத்தி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராக வழக்கினை பதிவு செ்யய வேண்டி நேற்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை போட்டுள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவடிவேலன். இன்றைக்கு அதைவிட பெரிய பொக்ரான் அணுகுண்டை வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக, கன்னட மீடியாக்களில் ‘லிங்கா’ பட விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிடக் கூடாது என்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு வழக்கினை தாக்கல் செய்து தடையாணையையும் பெற்றிருந்தார்.
அந்த வழக்கின் பிரமாண மனுவில் தமிழகத்தின் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் மதிப்பை குறைக்கும்வகையில் சில வாசகங்கள் இடம் பெற்றிருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது.
கன்னட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கும்படி சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த யாமினி கிரியேஷன்ஸ் அதிபர் ‘கெட்டப்’ ராஜேந்திரன் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில்தான் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ராக்லைன் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில் மக்கள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் இருந்த சில வாசகங்களை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
கெட்டப் ராஜேந்திரனின் கோரிக்கை மனு இங்கே :
இது மட்டும் உண்மையாக இருந்தால் ‘லிங்கா’ விவகாரம் இந்த வாரம் மேலும் சூடுபிடிக்கும் என்பது உண்மை..!











