full screen background image

“படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்” – விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்..!

“படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்” – விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்..!

தமிழ்த் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன் தற்போது ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் லவ் டுடே’ பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸில், “எல்.ஐ.சி. என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும்விதமாக இந்தப் படத்தின் தலைப்பு இடம் பெற்றுள்ளது..” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அதனால் இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டு, வேறு பெயரை சூட்ட வேண்டும். இல்லை என்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..” என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score