பாடகியான நடிகை லஷ்மி மேனன்..!

பாடகியான நடிகை லஷ்மி மேனன்..!

நடிகைகள் டப்பிங் பேசுவதே மிகப் பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவர்களை பாடவும் வைத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

இதற்கு முன்பும் பல நடிகைகள் இதுபோல ஒரு பாடலை பாடிய கதைகளெல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால் டப்பிங் பணியில் ஈடுபடும் மிகச் சிறந்த குரல் வளம்மிக்க நடிகை ரோகிணி போன்றவர்களெல்லாம் இன்றுவரையில் ஒரு பாடல்கூட தமிழில் பாடவில்லை. ஆனால் இன்றைய ஹீரோயின்களை தேடிப் பிடித்து பாட வைக்கிறார்கள்.

ஆண்ட்ரியா ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகளிலும், தனி ஆல்பத்திலும், சினிமாவிலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ரம்யா நம்பீசன் மலையாளப் படங்களில் பாடியவர் ‘பாண்டிய நாடு’ படத்தில் பாடிய ‘பை பை’ பாடலின் மூலம் ஒரு பாடகியாகவும் பெயரெடுத்துவிட்டார்.

இப்போது தொடர்ந்திருப்பது லஷ்மி மேனன். இந்த அம்மணியை நடிக்க வைக்கவே கியூவில் நிற்கிறார்கள் இயக்குநர்கள். இந்த நேரத்தில்தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்கிற படத்தில் பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஏக்நாத் எழுதிய பாடலை பாடியிருக்கிறார். பாடலுக்கு இசையமைத்திருப்பது இமான்.

இந்தப் படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி நடித்திருக்கிறார்கள்.  படத்திற்கு இதனால் கூடுதல் பப்ளிசிட்டியும் கிடைத்த மாதிரியாச்சு. அடுத்தப் படத்தி்ல் முன்னுரிமையுடன் கால்ஷீட் கேட்க வாய்ப்பும் கிடைச்சாச்சு என்கிற ரீதியில்தான் லஷ்மி மேனனின் இந்தத் திடீர் பாடகி அவதாரம் உருவெடுத்திருக்கிறதாம்..

எப்படியோ லஷ்மி மேனனின் இந்தப் பாடலுக்காகவே அந்தப் படம் ஓடிவிட வேண்டும் என்று பிரார்த்திப்போம்..!

Our Score