பிரசாந்த் படத்தில் பாடகியான லட்சுமி மேனன்..!

பிரசாந்த் படத்தில் பாடகியான லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் பாடகியாகவும் ஒரு ரவுண்டு வருவார் போல தெரிகிறது.

ஏற்கெனவே ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ திரைப்படத்தில் இமான் இசையமைப்பில் அவர் பாடிய ‘குக்குரூ’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்குள்ளாக அடுத்தப் பாடலையும் பாடிவிட்டார்..

நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வரும் ‘சாஹசம்’ படத்தில்தான் லட்சுமி மேனன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய வரிகளைத்தான் லட்சுமி பாடியிருக்கிறாராம்.  இந்தப் படத்தை அருண்ராஜவர்மா என்பவர் இயக்கியிருக்கிறார்.

லட்சுமி இப்போது பள்ளிக்கூடத்தில் பிஸியாக பிளஸ் டூ படித்துக் கொண்டிருப்பதால் கொம்பன் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தப் பாடலுக்காக ஒரேயொரு நாள் விடுமுறையன்று வந்து பாடிக் கொடுத்துவிட்டு போய்விட்டாராம்..! 

என்னமோ கோடம்பாக்கத்துக்குள்ள அப்பப்ப வந்து போனா சரிதான்..!

Our Score