‘வேலையில்லா பட்டதாரி’ டீம் மீண்டும் இணைகிறதாம். இயக்குநர் வேல்ராஜூம், நடிகர் தனுஷும் இந்த நல்ல செய்தியை இன்றைக்கு அவரவர் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார். இசை வழக்கம்போல அனிருத்துதான்..!
தனுஷ் தற்போது. ‘அனேகன்’, ‘மாரி’, ‘ஷமிதாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவைகளின் ஷூட்டிங் முடிந்ததும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்கவிருக்கிறதாம்.
Our Score