‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘லாபம்’.

இந்தப் படத்தை 7 சி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், விஜய் சேதுபதி புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மையக் கதையாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல், சாய் தன்ஷிகா என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

laabam movie stills

உணவு அரசியலும், கல கல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில், பல புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.  

ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு, கமர்சியல் கலந்து உருவாகி வரும் இந்த ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்று ஆனந்த விகடன்  வழங்கும் ‘விகடன் அவார்ட்ஸ்’ மேடையில் வெளியிடப்பட்டது.

laabam-team-av-awards-stage-2 laabam-team-av-awards-stage-1

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டீல் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது, "இங்கு சுட்டவர்களும்  குடிமக்கள்தான்; சுடப்பட்டவர்களும் குடிமக்கள்தான்" என்றார் ரத்தினச் சுருக்கமாக..!