full screen background image

‘தொல்லைக்காட்சி’ திரைப்படத்தில் L.R.ஈஸ்வரியின் குத்துப் பாடல்

‘தொல்லைக்காட்சி’ திரைப்படத்தில்  L.R.ஈஸ்வரியின்  குத்துப்  பாடல்

‘கயலாலயா நிறுவனம்’ சார்பில் பாலசெந்தில் ராஜா தயாரித்துள்ள படம் ‘தொல்லைக்காட்சி’. இதில் அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு பஞ்சு, ‘லொள்ளு சபா’ ஜீவா, மதுமிதா, மயில்சாமி, மனோபாலா, சண்முகசுந்தரம், நெல்லை சிவா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – தரண், படத் தொகுப்பு –  LVK தாஸ், கலை- சேகர், டிசைன் – REDDOT, இணை தயாரிப்பாளர் – ராம் குமார், தயாரிப்பாளர் – பாலசெந்தில் ராஜா, தயாரிப்பு  நிறுவனம் – கயலாலயா மூவீஸ், எழுத்து, இயக்கம் – எம்.சாதிக்கான்.

இந்தத் ‘தொல்லைக்காட்சி’ திரைப்படத்தில் பழம்பெரும் பாடகியான L.R.ஈஸ்வரி குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். நா.முத்துக்குமார் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். முத்துக்குமாரின் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி  பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் குறித்து பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பேசும்போது, “இந்த பாடலின் வரிகளும், இசையும் அருமையாக இருக்கிறது. ஒரு ‘கலாசலா’ பாடலைப்போல் இந்தப் பாடலும் நிச்சயம் வெற்றி பெரும்…” என்று வாழ்த்தினார்.

இந்தப் பாடலின் படபிடிப்பிற்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்டமான செலவில் செட் அமைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Our Score