full screen background image

12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு முதல் பரிசு..!

12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு முதல் பரிசு..!
நேற்று சென்னையில் நடந்து முடிந்த 12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசைப் பெற்றுள்ளது. ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
மேலும் நடுவர்களின் சிறப்புப் பரிசு பார்த்திபன் இயக்கிய ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ படத்திற்குக் கிடைத்துள்ளது. ‘பூவரசம் பீப்பி’ திரைப்படத்திற்கும் ‘சிறப்பு பரிசு’ கிடைத்திருக்கிறது.
வருடாவருடம் அமிதாப்பச்சன் பெயரில் வழங்கப்படும் ‘சிறந்த கலையுலக இளைஞருக்கான விருது’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு வழங்கப்பட்டது.
‘அம்மா விருது’ எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ச்சீ என்ற குறும்படத்திற்குக் கிடைத்துள்ளது.
  
 
Our Score