full screen background image

நீலம் புரொடெக்சன்ஸ் வெளியிடும் ‘குதிரை வால்’ மார்ச் 18-ம் தேதி வெளியாகிறது..!

நீலம் புரொடெக்சன்ஸ் வெளியிடும் ‘குதிரை வால்’ மார்ச் 18-ம் தேதி வெளியாகிறது..!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்  ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது அடுத்தடுத்து தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.

ந்நிலையில்  நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குதிரை வால்’ என்கிற படத்தை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனமும், யாழி பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

எழுத்து – ராஜேஷ், இசை – பிரதீப் & மார்டின் விசர், படத் தொகுப்பு – M.K.P.கிரிதரன், ஒளிப்பதிவு- கார்த்திக் முத்துக்குமார், கலை இயக்கம் – ராமு தங்கராஜ், ஒலிப்பதிவு – ஆண்டனி ரூபன், பாடல்கள் – உமாதேவி, இயக்கம் – மனோஜ் லியோனல் ஜாசன் & ஷ்யாம், தயாரிப்பு – யாழி பிலிம்ஸ், நீலம் புரொடெக்சன்ஸ், வெளியிடு – நீலம் புரொடக்சன்ஸ்.

அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன்  – ஷ்யாம் சுந்தர்  ஆகியோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

“இந்தக் குதிரை வால்’ படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியிருக்கிறது.

உளவியல், ஆள் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப் படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும்,  மேஜிக்கல் ரியலிச சினிமாவாக இந்தக் குதிரை வால்’ படம் இருக்கும்.

இது போன்ற படங்கள் தமிழில் மிகக் குறைவு. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல; இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக  படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்விதமாகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

முற்றிலும் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் இந்தக் ‘குதிரை வால்’ படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்…” என்கின்றனர் இந்த படத்தின் இயக்குநர்களான மனோஜ், மற்றும் ஷியாம்.

“இது போன்ற படங்கள் திரைப்பட விழாக்களிலும், விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த படங்கள் அனைத்துமே சமூக கருத்துக்களைக் கொண்டவையாகத்தான் இருந்தன. அந்த வரிசையில் இந்த குதிரை வால்’ படமும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமா அனுபவத்தை தரும்…” என்கிறது படக் குழு.

தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தக் குதிரை வால்’ திரைப்படம் வரும் மார்ச் 18, வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Our Score