full screen background image

“இப்போது சுந்தர் சி.யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன்..” – குஷ்பூவின் பெருமிதம்..!

“இப்போது சுந்தர் சி.யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன்..” – குஷ்பூவின் பெருமிதம்..!

இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘ஆம்பள’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பூ பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“எனக்கு விஷாலை நீண்ட நாட்களாகத் தெரியும். அவர் சினிமாவில் நடிக்க வரும்போதே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

இந்தப் படத்தை என் கணவர் சுந்தர்.சி இயக்கும்போது நான் போனால்கூட யாரோ மாதிரி என்னைப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் இரவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள்… சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை.

நான் போனால் அவர்கள் சுதந்திரம் கெட்டுவிடும் என்று படப்பிடிப்பை பார்க்கக்கூட நான் போகவில்லை.இந்த நட்பால் அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்கள். அதனால் அவர்களால் எளிதாக சேர்ந்து வேலை பார்க்க முடிந்தது.

ஹன்ஸிகா தான் நடித்த எல்லாப் படத்தையும்விட இந்தப் படத்தில் அழகாகத் தெரிகிறார். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வருகிறது. நிச்சயம் இது ஒரு பொங்கல் கொண்டாட்டம்தான். இப்போது சுந்தர்.சியின் மனைவி என்பதில் ரொமப்வும் பெருமைப்படுகிறேன்..” என்று கூறி வாழ்த்தினார்.

Our Score