full screen background image

தி.மு.க.வின் கொள்கை பிரச்சார பீரங்கி நடிகை குஷ்பு கட்சியில் இருந்து திடீர் விலகல்..!

தி.மு.க.வின் கொள்கை பிரச்சார பீரங்கி நடிகை குஷ்பு கட்சியில் இருந்து திடீர் விலகல்..!

பிரபல நடிகை குஷ்பு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு வெளிப்படையான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

Khusbhu Sundar Statement

தி.மு.க.வில் சமீப காலமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தவிர மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட சூழலில் இருந்த குஷ்புவுக்கு கடைசியில் இதனைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது..

கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் குஷ்பூவை கருணாநிதியால் காப்பாற்ற முடியவில்லை. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் குஷ்புவை நிறுத்த கருணாநிதி மிகவும் முயற்சித்தும் ஸ்டாலின் அதனை விரும்பாத காரணத்தினால் குஷ்பு பெரிதும் ஏமாற்றமடைந்தார்.

kushboo-7

இத்தனைக்கும் 2010-ம் ஆண்டு குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்தபோது ஆரவாரத்தோடு அதனை வரவேற்றவர் ஸ்டாலின்தான். ஆனால் அதன் பின்பு குஷ்புவுக்கு கருணாநிதியிடத்தில் கிடைத்த தனி செல்வாக்கும், குஷ்பு ஸ்டாலின் பற்றி திருச்சியில் பேசிய பேச்சும் அவரை ஸ்டாலினின் எதிரியாக்கிவிட்டது.

kush-1

கட்சியின் அடுத்தத் தலைவர் யார் என்பதை கட்சியின் பொதுக்குழுதான் முடிவெடுக்கும் என்று குஷ்பு சொன்ன வார்த்தைகளுக்காகவே அவரை விமான நிலையத்தில் ஓட, ஓட விரட்டியடித்தார்கள் தி.மு.க. தொண்டர்கள். இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டும் இத்தனை நாள் குஷ்பு அங்கே இருந்ததே மிகப் பெரிய விஷயம் என்கிறார்கள்..

ஜெயா டிவியைவிட்டு வெளியேறிய பின்பு அவரது அவ்னி புரொடெக்சன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட சீரியல்கள் அனைத்தும் கலைஞர் டிவியில்தான் ஒளிபரப்பானது. ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் இப்போதும் ஸ்டார் அட்ராக்சன் குஷ்புதான்.. பெண்கள் மத்தியில் அவருக்கிருக்கம் ஸ்டார் செல்வாக்கை கட்சிக்குப் பயன்படுத்த நினைத்தார் கருணாநிதி. ஆனால் அவரது குடும்பமோ, தங்களைத் தவிர வேறு யாரும் கட்சியில் வளரவே கூடாது என்று நினைத்து காய் நகர்த்த.. ஒரு அளவுக்கு மேல் கருணாநிதியால் குஷ்புவை காப்பாற்ற முடியவில்லை.

kusbhoo-5

குஷ்புவையும், கருணாநிதியையும் இணைத்து வாரப் பத்திரிகையொன்று அவதூறாகச் செய்தியைப் பரப்பியபோது அதனை வன்மையாகக் கண்டித்த கருணாநிதி, அந்தப் பத்திரிகையை தி.மு.க. தொண்டர்கள் இனிமேல் வாங்கக் கூடாது என்றுகூட கடிதம் எழுதினார். அந்த அளவுக்கு குஷ்புவுக்கு மரியாதை கொடுத்திருந்தார்.

ஆனாலும் கட்சிக்குள் அவருக்கு சுத்தமாக மதிப்பே இல்லாமல் இருந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த 5 நாட்கள் கழித்துதான் குஷ்பு பிரச்சாரத்திற்குக் கிளம்பினார். அதிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே பேசினார். மேலும் நாட்கள் ஒதுக்கிக் கொடுத்தும் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்த பல தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் அவரை அழைக்கவே இல்லை.

சென்ற ஜூன் 3-ம் தேதியன்று கருணாநிதியின் பிறந்த நாளன்று கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவிட்டு கிளம்பிய குஷ்புவுக்கு அன்றைக்கும் அந்த வீட்டில் எதிர்பார்த்த மரியாதை இல்லையாம்.. இனிமேலும் ஒட்டுவார் ஒட்டியாக ஒட்டிக் கொண்டிருப்பதைவிட.. ஒதுங்கிப் போவதே நல்லது என்று நினைத்து இன்றைக்கு நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறார் குஷ்பு..

அதே நேரம் தான் எந்தவொரு கட்சியிலும் சேரப் போவதி்லலை என்றும். அதற்காக தான் தி.மு.க.வில் இருந்து விலகவில்லை என்றும். இனி தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடப் போவதாகவும் டிவீட்டரில் கூறியுள்ளார் குஷ்பு..

@khushsundar: Thanks for the support.. humbled n indebted.. very emotional moment.. request my friends from press to leave me alone for sometime…

@khushsundar: Will always hve my highest regards 4 @kalaignar89 all thru my life.. he is not just leader but a father I never had.. nothing can tke tat away

@khushsundar: I am not jumping into any other party.. so stop assumptions n hold back ur horses friends.. need some time alone with family..

இனி குஷ்பு தனது குடும்பத்துக்காகவே உழைக்கட்டும். இது இயக்குநர் சுந்தர்.சி.க்கு நல்லதுதாகத்தான் இருக்கும். இதன் மூலம் கோடம்பாக்கத்துக்கும் நல்லது நடக்கும் என்று நம்புவோமாக..!

Our Score