தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்..! 

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்..! 

தெலுங்கில் மூத்த நடிகரான மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் சில படங்களில் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ‘குறள் 388.’

‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, ‘காட்சி நேரம்’ ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஜான் சுதீர்குமார் புதோடோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் ‘குறள் 388’ என்றும் தெலுங்கில் ‘வோட்டர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது

இதில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக நடிகை சுரபி நடிக்கிறார். மற்றும் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய்,  பிரம்மானந்தம், சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை  – எஸ்.எஸ்.தமன், வசனம் – ரவிசங்கர், ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், கலை – கிரன் மன்னி, திரைக்கதை – கே.எல்.பிரவீன், இணை  தயாரிப்பு – கிரண் தனமாலா, தயாரிப்பு   -ஜான் சுதீர்குமார் புதோடோ, எழுத்து, இயக்கம் – G.S.கார்த்தி.

படம் பற்றி இயக்குநர் ஜி.எஸ்.கார்த்தி பேசும்போது, “இரு வரிகளில், ஏழு வார்த்தைகளை கொண்ட திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவுமே இல்லை.

‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன்  மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.’

என்ற 388-வது குறளின் கருத்துக்கள்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.

பரபரப்பான இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இத்திரைப்படம் உருவாகிறது. இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும்.

இதில் காதல், மோதல், காமெடி எல்லாமும் இருக்கு. விஜயதசமி அன்று தனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறார் விஷ்ணு மஞ்சு. அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்றார் இயக்குநர்.

Our Score