ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆ.ஜார்ஜ் வில்லியம் தயாரித்துள்ள திரைப்படம் ‘குலசேகரபட்டினம்’.
இதில் கதாநாயகனாக ஜேம்ஸ் என்ற புதுமுக நடிகர் தனது முதல் படத்திலேயே அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.
வில்லனாக படத்தின் இயக்குநர் ஆள்வானும், நகைச்சுவை நடிகராக ஜூனியர் T.ராஜேந்திரன் என்பவரும் நடித்திருக்கிறார்கள். மேலும், உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி உட்பட பல புதுமுக கலைஞர்களும் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சில படங்களில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள். பாடல்கள் – தஞ்சை சிகரன், படத் தொகுப்பு – கே.துரைராஜ், நடனம் – ‘பவர்’ சிவா, கலை இயக்கம் – மணி, கதிர், ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், இணைத் தயாரிப்பு – பிரபா வில்லியம், தயாரிப்பு – ஆ.ஜார்ஜ் வில்லியம்.
இந்தப் படத்தை பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அறிமுக இயக்குநரான ஆள்வான் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கிராமத்து பண்பாடு, கலாச்சாரத்தோடு அண்ணன் – தம்பி பாசத்துடன், காதலையும் கலந்து நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சுப்பம் மாதரம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், பசுவந்தனை கிராமம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.