full screen background image

*வாழ்க்கை அனுபவக் கதைகளுக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம்’ படக் குழுவின் அறிவிப்பு..! 

*வாழ்க்கை அனுபவக் கதைகளுக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம்’ படக் குழுவின் அறிவிப்பு..! 

சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து  அனுப்பினால்  சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக் குழுவினர்  தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். 

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் தன் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம்’ என்கிற படத்தை உருவாக்கியுள்ளார் தயாரிப்பாளர் பி.என்.பலராம்.

இப்படத்தை பி.என்.பி. சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.என்.பலராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்துள்ளார்.

படத்தில் அக்சய் கிருஷ்ணன்,  நாயகனாக  நடிக்க. நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இதேபோல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத  ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகளை பரிசாக வழங்க ‘கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.

அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட், டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக் காசுகளை  ஐந்து நாளைக்கு  ஒரு முறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும்வரை தொடரும். 

வரும் பிப்ரவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘கிரிஷ்ணம்’ படக் குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.

Our Score