நாயகனின் சொந்த வாழ்க்கையில் நடந்த கதைதான் ‘கிரிஷ்ணம்’ திரைப்படத்தின் கதையாம்..!

நாயகனின் சொந்த வாழ்க்கையில் நடந்த கதைதான் ‘கிரிஷ்ணம்’ திரைப்படத்தின் கதையாம்..!

பி.என்.பி. சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.என்.பல்ராம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கிரிஷ்ணம்’.

இப்படத்தில் கதாநாயகனாக அக்‌ஷய் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடித்துள்ளனர்.

ஹரி பிரசாத்தின் இசையில் கவிஞர் சந்தியா பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை எழுதி  இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இதுவொரு புரட்சிகரமான கதைக் களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்புதான் இத்திரைப்படம்.  

படத்தின் நாயகனான அக்சய் கிருஷ்ணனின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான சம்பவங்களே இந்த ‘கிரிஷ்ணம்’ படத்தின் கதை. உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு.

படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இட்டுச் செல்லும் அளவுக்கு பரபரப்பான திரைக்கதையில் இந்த பரபரப்புமிக்க ‘கிரிஷ்ணம்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும்வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக டி.ஆர்.எம். தொழில் நுட்பம் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த டி.ஆர்.எம். (Digital Rights Management) தொழிற் நுட்பத்தினால் இணையத்தளங்களில் திருட்டுத்தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Our Score