நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவானது..!

நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவானது..!

இசையமைப்பாளர் அனிரூத் இசையமைப்பில், நடிகர் சிம்பு, ‘பீப் சாங்’ என்ற பெயரில் பாடிய பாடல் நேற்று யூடியூபில் வெளியானது.

ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு அநாகரிமான முறையில் எழுதப்பட்டிருந்த பாடல் வரிகளைக் கேட்டு நேற்றில் இருந்து தமிழ்நாடே கொதிப்பில் இருக்கிறது.

இந்த நிலையில் பாடியது தான்தான் என்பதை ஒத்துக் கொண்ட சிம்பு, “இது எனது தனி மனித உரிமை. இதில் வேறு யாரும் தலையிடக் கூடாது…” என்று கூறியிருந்தார். இதன் பின்பு சிம்பு, அனிருத் இருவரின் மீதான எதிர்ப்புகள் அதிகப்படியாக கிளம்பியிருக்கின்றன. 

இன்று கோவையில், இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்றும், பாடலை எழுதியவர், பாடியவர், இசையமைத்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் உடனேயே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் இது பற்றி புகார் மனு அளித்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், பெண்களை இழிவுபடுத்துதல், அவமானப்படுத்துதல், இணையத்தில் ஏற்றுதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகளில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிம்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சேலத்திலும் இதேபோல் சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Our Score