full screen background image

‘கொன்றால் பாவம்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது..!

‘கொன்றால் பாவம்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது..!

EINFACH ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் கொன்றால் பாவம்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கான்செப்ட் – மோகன் ஹபு, இசை & பின்னணி இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – ஆர். செழியன், படத் தொகுப்பு – ப்ரீத்தி பாபு, கலை இயக்கம் – விதால் கோசனம், பாடல்கள் – பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன், நடன இயக்கம் – லீலா குமார், ஒலிக் கலவை – உதய் குமார், எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் – வினோத் குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன், ஒப்பனை – சண்முகம், உடைகள் – சக்ரி, ஆடை வடிவமைப்பு – மீரா சித்திரப்பாவை, விளம்பர வடிவமைப்பு – நவீன் குமார்.

தயாள் பத்மநாபன் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதையையும் சேர்த்தே கவனிக்கிறார். இந்தப் படத்தை டி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும், தயாள் பத்மநாபன் படத்தில் ஜான் மகேந்திரனுடன் இணைந்து வசனமும் எழுதுகிறார்.

இந்தக் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம்தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்தக் கட்டப்பிடிப்பு தொடங்கும் என படக் குழு அறிவித்துள்ளது.

Our Score