full screen background image

’கொன்றால் பாவம்’ படம் 2023 கோடை கால விடுமுறையில் வெளியாகிறது..!

’கொன்றால் பாவம்’ படம் 2023 கோடை கால விடுமுறையில் வெளியாகிறது..!

வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் 2023-ம் ஆண்டின் கோடை கால விடுமுறையில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

தயாரிப்பு – EINFACH ஸ்டுடியோஸ் – ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார், இணை தயாரிப்பு – தயாள் பத்மநாபன், டி பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் – தயாள் பத்மநாபன், வசனம் – தயாள் பத்மநாபன் மற்றும் ஜான் மகேந்திரன், மூலக் கதை – மோகன் ஹப்பு, இசை – சாம்  C.S., ஒளிப்பதிவு – செழியன்.R., படத் தொகுப்பு – ப்ரீத்தி பாபு. கலை இயக்கம் – விதல் கோசனம், பாடல்கள் – பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன், நடன இயக்கம் – லீலா குமார், ஒலிக்கலவை – உதயகுமார், நிர்வாகத் தயாரிப்பு – வினோத்குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா  D’One., ஒப்பனை – சண்முகம், உடைகள் – சக்ரி, ஆடை வடிவமைப்பு – மீரா சித்திரப்பாவை, விளம்பர வடிவமைப்பு – நவீன் குமார்.

1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

கன்னடத்தில் இரு முறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார்.  கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கநர் மற்றும் சிறந்த துனை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது.

பிறகு, பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது தமிழில் தயாராகும் இந்தப் படத்தை இயக்குநர் தயாள் பத்மநாபனே இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம், 2023-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Our Score