DK பிக்சர்ஸ் வழங்கும் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ என்ற புதிய திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது.
கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் இருவரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், அபினவ், தீப்பெட்டி கணேசன், கே.கே.சேஷூ, கிரேன் மனோகர் மற்றும் ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மா.பெ ஆனந்த், இசை – வல்லவன், நடனம் – தீனா, சண்டை பயிற்சி – நாக்அவுட் நந்தா, மக்கள் தொடர்பு – செல்வரகு, தயாரிப்பாளர் – ஜெ.தனலட்சுமி, எழுத்து, பாடல்கள், இயக்கம் – ந.கிருஷ்ணகுமார்.
மூன்று பேரன்களை அண்ணன்-தம்பிகளாக கொண்ட ஒரு தாத்தா, அதே போல அக்கா தங்கைகளாக கொண்டுள்ள பெண்களுக்குத்தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்றும் அப்படி இல்லாதபட்சத்தில் தனது சொத்து முழுவதையும் கோயிலுக்கு எழுதி வைத்து விடுவதாகவும் கூறுகிறார்.
இதனால் சொத்தின் மீது ஆசை கொண்ட கதாநாயகன், தனது அண்ணன்களுக்கு ஏற்படும் காதல் மற்றும் திருமணத்தை தடுக்கிறார். இந்நிலையில், கதாநாயகனுக்கு அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. இதை அண்ணன்கள் தடுக்கிறார்கள்.
தாத்தா ஏன் இப்படி உயில் எழுதினார்..? கதாநாயகனின் காதல் கை கூடியதா..? தாத்தாவின் சொத்துக்கள் பேரன்களுக்கு கிடைத்ததா..? என்பதை கலகலப்புடன் சொல்லும் காமெடி கலந்த காதல் கதை இது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டூடியோ, மகாபலிபுரம், பாண்டிச்சேரி சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடந்தது. இப்படத்தின் இசையமைப்பாளர் வல்லவன் இசையில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை ரம்யா, சைந்தவி, வல்லவன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.