‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..!

‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..!

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது  நடிகர்  அர்ஜூனுடன்  இணைந்து ‘கொலைகாரன்’  என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை தியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பிரதீப் தயாரித்திருக்கிறார்.

ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

kolaikaaran-movie-poster-1

இயக்குநர் – ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பு நிறுவனம் – தியா மூவிஸ், தயாரிப்பாளர் பி.பிரதீப், ஒளிப்பதிவு – மியூக்ஸ், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், மக்கள் தொடர்பு – நிகில், புகைப்படம் – ஆர்.எஸ்.ராஜா, நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – ஹினா, டப்பிங் பொறியாளர் – சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – கே.சக்திவேல், விளம்பர வடிவமைப்பு – ஓ.கே.விஜய், தயாரிப்பு நிர்வாகி – ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், டிஸைன்ஸ் – Gibsonuga, கிராபிக் டிஸைன்ஸ் – Hues media design. நிர்வாகத் தயாரிப்பாளர் – சாண்ட்ரா ஜான்ஸன், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ஜனார்த்தனன், இணை தயாரிப்பு – சுந்தரகாமராஜ்.

தற்போது இத்திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடவிருக்கிறார்.

படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதையொட்டி தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இந்தப் படம் சம்பந்தமாக கவர்ச்சிகரமான ஒரு போட்டியை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதன்படி இந்தக் ‘கொலைகாரன்’ படத்தில், படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதைக் கண்டறிவதுதான் அந்தப் போட்டி.

kolaikaaran-movie-advt-poster-1

இதற்கான வழிமுறைகள் இவைதான் :

இன்று ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏப்ரல் 24-ம் தேதிவரையிலும் தினமும் ஒரு நாளைக்கு ‘கொலைகாரன்’ படத்தின் ஒரு போஸ்டர் என்று மொத்தம் 6 போஸ்டர்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.

வெளியாகவிருக்கும் ஆறு போஸ்டர்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய துப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.

ஆறாவது நாளின் முடிவில் அனைத்து போஸ்டர்களிலும் இருக்கும் துப்புக்களை ஒருங்கிணைத்தால், நிச்சயமாக அந்தக் கொலைகாரனின் உண்மைப் பெயரை கண்டறிய முடியும்.

அப்படி அந்தப் பெயரை சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களில் 4 பேருக்கு FASTTRACK கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும்.

மேலும், சரியான விடையைக் கண்டுபிடிக்கும் 100 ரசிகர்களுக்கு ‘கொலைகாரன்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுக்கள் கிடைக்கும்.

இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான பதில்களை kgcontest@gmail.com என்ற இணைய முகவரிக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள்ளாக அனுப்ப வேண்டும்.

பரிசு பெறுபவர்களின் விபரம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும்.

ஒரு போட்டியாளருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

நீங்கள் எழுதியனுப்ப வேண்டியது :

கொலைகாரனின் கதாபாத்திரத்தின் பெயர்.

மற்றும்

உங்களது பெயர், வயது மற்றும் கைப்பேசி எண்.

முந்துங்கள் ரசிகர்களே..!

Our Score